சமயபுரம், அக்.9:மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு தமிழக அரசின் 1 கிராம் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இதற்கான நிபந்தனையில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில், பழையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால்-செல்வலெட்சுமி தம்பதிக்கு நேற்றுமுன்தினம் பெண் குழந்தை பிறந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று தமிழக அரசு சார்பில் 1 கிராம் தாய் மாமன் தங்க மோதிரத்தை தலைமை மருந்துவர் ராணி குழந்தைக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


