Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மணப்பாறையில் வைக்கோல் போரில் தீ

மணப்பாறை, செப்.9: மணப்பாறையில் வைக்கோல் போரில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மணப்பாறை அடுத்த செவலூர் மாமுண்டி பாலம் அருகே அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் வைக்கோல் போர்களை வைத்துள்ளனர். இதில் இரவு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணப்பாறை தீயணைப்புத்துறை வீரர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.