மணப்பாறை, அக்.8: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சியில் முறையாக பணி வழங்கவில்லை எனக் கூறி விபி ஜி ராம் ஜி வேலை பணியாளர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சி பூங்குருனிபட்டி மற்றும் கணவாய்பட்டி பணியாளர்களுக்கு 2026-27-க்கான நடபாண்டில் விபி ஜி ராம் ஜி திட்ட பணிகள் முறையாக வேலை வழங்க வில்லையாம்.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் முறையான பணி வழங்காததை கண்டித்து, பணியாளர்கள் நேற்று மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேனி, ஊராட்சி செயலாளர் கண்ணன், புத்தாநத்தம் எஸ்ஐ துளசி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து ேபாராட்டம் கைவிடப்பட்டது.


