திருச்சி, அக்.8: திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுகை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான கால்பந்து போட்டி தஞ்சை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியால் அன்னை சத்யா விளையாட்டரங்கில் நாக்அ வுட் முறையில் நடைபெற்றது.
9 கல்லூரி அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் குடந்தை, அரசு மகளிர் கல்லூரி, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து மாணவியர்களுக்கான கால்பந்து போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தஞ்சை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ரோஸி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பொருளாதாரத் துறைத் தலைவர் மலர்விழி, உடற்கல்வி துறை தலைவர் தேன்மொழி, பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் பேராசிரியர் பழனிச்சாமி, ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் மாலதி, பெண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் மாலதி ஆகியோர் முன்னிலையில் கோப்பைகளும், சான்றிதழ்களையும் வழங்கினார்.


