திருச்சி அக்.8: யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு வணிகர்கள் மீது 0.4% வரி விதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், ஆன்லைன் வர்த்தக ஊக்குவிப்பைத் தடை செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் எஸ்.பி. பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 150க்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, சில்லறை வர்த்தகத்தை முற்றிலுமாக அழிக்கும் மத்திய அரசின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்தும், உடனடியாக வரி விதிப்பு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஏற்கனவே வணிகர்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் யூ.பி.ஐ வரி விதிப்பு என்கிற புதிய நடைமுறை மேலும் சுமையை ஏற்படுத்துவதாகவும் ,இதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.


