திருச்சி, ஆக.7: திருச்சியில் வெளியூர் சென்றிருந்த பெண்ணின் வீட்டில் பூட்டை உடைத்து திருட முயன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அம்மாகண்ணு(62). இவர், கடந்த ஜூலை 18ம் தேதி கண் சிகிச்சைக்காக சென்னை சென்றார். அப்போது, வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது.
கடந்த 5ம் தேதி வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலக்கரை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, வீடு புகுந்து திருட முயன்ற பீமநகரை சேர்ந்த வீரபாண்டியன்(30) என்பவரை கைது செய்தனர்.



