Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

திருச்சி, ஆக.7: திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 2 வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (54). இவர், கடந்த 4ம் தேதி லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார்.

அப்போது, டூ வீலரில் வந்த 3 பேர் அவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். சுதாரித்துக் கொண்ட சாதிக்பாட்ஷா, பொதுமக்கள் உதவியுடன் அவர்களை பிடித்தார். பின்னர் மூவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, அரியமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்த சபரிநாதன்(22), ராஜ்குமார்(24) ஆகியோரை கைது செய்தனர். மேலும், 17வயது சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.