Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்ணிடம் தகராறு ஆட்டோ டிரைவர் கைது

திருச்சி, ஜூன் 6: திருச்சியில் இளம்பெண்ணை தவறாக பேசிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி என்எஸ்சிபி சாலை பகுதியை சேர்ந்தவர் நிவேதா (27). இவர், கடந்த 30ம் தேதி ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த முகமது மைதீன் (28) ஓட்டினார்.

அப்போது நிவேதாவிற்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முகமது மைதீன் நிவேதாவை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.