திருச்சி, செப்.5: தஞ்சாவூர் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண், திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு ஆடை வடிவமைப்பு அகாடமியில் பயிற்றுனராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் விடுமுறை எடுத்துவிட்டு மீண்டும் வேலைக்கு வந்துள்ளார். அப்போது, அகாடமி உரிமையாளர் அப்பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் வேலையை விட்டு விலகுவதாகக் கூறி, தனது அசல் கல்விச் சான்றிதழையும் நிலுவைச் சம்பளத்தையும் கேட்டு உள்ளார். அதைத் தர மறுத்து அகாடமி உரிமையாளர் அப்பெண்ணை தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குபதிந்து அகாடமி உரிமையாளர் சுமதி (48), பெயர் மாற்றப்பட்டுள்ளது) கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.


