திருச்சி, செப்.5: கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(30). இவர், தனது உறவினர் பெண்ணான 26வயதுள்ள பெண்ணை காதலித்துள்ளார். இதில், அந்த பெண் கர்ப்பமானார். இவர்கள் திண்டுக்கல் வடமதுரையில் வசித்து வந்தனர். இந்நிலையில் சூர்யாவுக்குத் தனது சகோதரியின் தோழியுடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கோவையில் உள்ளார்.
இதைக் தட்டிக்கேட்ட முதல் மனைவியை சூர்யாவின் உறவினர்கள் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பினர். இது குறித்த புகாரின் பேரில், பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து சூர்யா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த பகுதி வடமதுரை என்பதால், தற்போது, இந்த வழக்கு வடமதுரை அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


