திருச்சி, ஆக.5:திருச்சியில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலைப்பட்டி சாலமோன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(40). இவரது மனைவி ஸ்டெல்லா மேரி (37). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி அப்பகுதியில் ஒரு பள்ளியில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.
ஆக.2ம் தேதி இரவு கணவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.


