திருச்சி, ஆக.5: திருச்சி எஸ்ஐடி பகுதியில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் அபிமன்னன்(36). இவர் ஆக.1ம் தேதி தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கணேசபுரம் பகுதியிலுள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். அப்போது எஸ்ஐடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. உடனே பஸ்நிறுத்தம் அருகே அமர்ந்தார்.
அப்போது அவ்வழியே வந்த 2 பேர் அபிமன்னன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து அவரை பிளேடால் தாக்கி செல்போனை பறித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து அரியங்கலம் ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அகமது ரியாஸ்கான்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை தஞ்சாவூரில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.


