Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சட்டவிரோதமாக மதுவிற்ற 3 பேர் கைது

திருச்சி, பிப்.5: சட்டவிரோதமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து ஜன.3ம் தேதி போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.

அப்போது டிவிஎஸ் டோல்கேட் அருகே மதுவிற்ற திருவெறும்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் (47) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் தமிழ்நாடு ஓட்டல் அருகே மதுவிற்ற தில்லைநகர் சின்னசாமி நகர் ஆழ்வாா்த்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது மாணிக்பாஷா(36) மற்றும் தென்னூா் ஆழ்வார்தோப்பு இதயாத் நகரைச் சேர்ந்த முகமதுசலீம்(42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.