துறையூர், நவ.4: உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் வீரப்பன் தலைமையில் தீயணைப்புத் துறை சார்ந்த அலுவலர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். தீ விபத்து ஏற்பட்டால் நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது போன்ற நிகழ்வுகளை மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் 8ம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ நன்றி கூறினார்.


