திருச்சி, நவ.4: திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவன் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சியை சேர்ந்தவர் வினோத் (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு திருச்சிக்கு வந்திருந்த வினோத், நவ.2ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் வினோத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர்.


