Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்

திருச்சி, நவ.4: திருச்சி மத்திய சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மத்திய சிறையில் சிறை அதிகாரிகள் கடந்த 1ம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒவ்வொரு சிறை வார்டுகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, 13வது வார்டுக்கு பின்னால் இருந்த புளியமரத்திற்கு அருகில், பேட்டரியுடன் கூடிய செல்போன் கிடப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.