Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உப்பிலியபுரம் அருகே விஷ ஜந்து கடித்து சிறுவன் சாவு

துறையூர், ஜூன் 4: திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள பச்சபெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் ரஞ்சித்(7). எரகுடியிலுள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். இவரது குடும்பத்துக்கு சொந்தமாக புளியஞ்சோலை செல்லும் வழியில் தோட்டம் உள்ளது. இதில் ரஞ்சித் நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்த போது ஏதோ உயிரினம் கடித்துள்ளது. உடனே சிறுவன் வயலில் இருந்த தனது தாத்தாவிடமும், தந்தையிடமும் காட்டியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் எரகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுவனை கொண்டு சென்று காட்டிய போது அங்கிருந்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறினார். இது தொடர்பான தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.