Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுபோதையில் கீழே விழுந்து ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

திருவெறும்பூர், ஜூன் 4: திருநெல்வேலி சிஎன் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (66). இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திருவெறும்பூர் பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆட்டோவிற்கு உரிய வாடகை தராததால் உரிமையாளர் ஆட்டோவை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையே சுப்பிரமணியனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இவருக்கு உறவு என்று சொல்லக்கூடிய அளவிற்கு யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு திருவெறும்பூர் டி.நகர் பகுதியில் மதுபோதையில் கட்டையில் அமர்ந்திருந்தவர் கீழே விழுந்த இறந்தார். தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.