Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

குட்கா விற்ற 2 பேர் கைது

திருச்சி, மே 4: திருச்சியில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலை பகுதியில் குட்கா விற்கப்படுவதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மே 2ம்தேதி போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரயில்வே காலனி அருகே குட்கா விற்ற மேலகல்கண்டார் கோட்டை வள்ளுவர் தெருவை சேர்ந்த சுடலைமணி(36) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல அரியமங்கலம் பாரதியார் தெரு அருகே குட்கா விற்ற காட்டூர் இளங்கோ தெருவைச் சேர்ந்த கண்ணன்(46) என்பவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 120 கிராம் குட்கா பறிமுதல் செய்தனர்.