Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

திருச்சி,மே 4: திருச்சியில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர். திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் இளையராஜா(44). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை நிமித்தம் காரணமாக தனது மகளை வீட்டை விட்டு வெளியேற்றினார்.

இதுகுறித்து புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளது. இந்நிலையில் மே 1ம்தேதி வீட்டிற்கு வந்த இளையராஜா தனது மனைவி மற்றும் மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து இளையராஜாவை கைது செய்தனர்.