Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வையம்பட்டியில் வெங்காய லோடு வேன் கவிழ்ந்தது

மணப்பாறை, ஜூன் 3: xபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரை அடுத்த இரூர் பகுதியினை சேர்ந்தவர் நல்லேந்திரன் மகன் பாலசுப்பிரமணி(33). இவர் நேற்று முன்தினம் தனது மினி சரக்கு வேனில், சின்னவெங்காய லோடு ஏற்றிக்கொண்டு சிறுகனூரில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் செல்வதற்காக, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்.

வேன், மணப்பாறை அடுத்த ஆலத்தூர் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவிலுள்ள தடுப்பில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் உடன் வந்திருந்த திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கதிர்வெட்டி சின்ராமன் (58) கையில் காயமடைந்து மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.