Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு வீரர்களை கலங்கடித்த காளைகள்

மணப்பாறை, மார்ச் 2: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 9ம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா பெஸ்டோ நகரில் நேற்று நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வடமாட்டிற்கு வேட்டி, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தம் விழா தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியை மணப்பாறை தாசில்தார் சுந்தரபாண்டியன், டிஎஸ்பி காவியா ஆகியோர் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் களத்தில் இறங்கிய 13 காளைகளை 117 வீரர்களில், மாடு ஒன்றிற்கு 9 மாடு பிடி வீரர்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் மாட்டை அடக்கினர். வடத்தில் இணைக்கப்பட்டுள்ள காளைகள் வீரர்களை களத்தில் கலங்கடித்து விளையாடியது.

இதில் மாடு, வீரர்களின் கைகளில் சிக்காமல் விளையாடியது. வெற்றி பெற்ற காளைக்கும், களங்கடித்த காளையை அடக்கிய வீரர்களின் அணிக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி காவியா, இன்ஸ்பெக்டர் ராஜாசேர்வை ஆகியோர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.