Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

லால்குடி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

லால்குடி, ஆக.1: லால்குடி அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு பலியானார். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேலவாளாடி பெரியார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி பழனியம்மாள் (85). இவர் நேற்று காலை மேல வாளாடி பழைய ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனியம்மாள் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்ட இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் பிருந்தா விசாரணை நடத்தி வருகிறார்.