திருச்சி, செப்.30:திருச்சியில் எம்பிபிஎஸ் சீர் வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருச்சி பாலக்கரை காஜாபேட்டை ஆலம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது எலியாஸ். இவர் தனது மகனுக்கு நீட் தேர்வு முடிந்தநிலையில், மருத்துவ இடம் பெற முயற்சி செய்து உள்ளார். அப்போது, இவருக்கு ரபீக் முகமது என்பவர் அறிமுகமாகி, மகனுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாக கூறினார். இதனை நம்பிய முகமது எலியாஸ், ஜிபே மூலம் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.6.5 லட்சம் பணத்தை ரபீக் முகமதுவிடம் அனுப்பி உள்ளதாக தெரிகிறது.
ஆனால், முகமது எலியாஸ் தனது மகனுக்கு தனியாக முயற்சித்து கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் எம்.பி.பி.எஸ் சீட் பெற்றுவிட்டார். இதனையடுத்து, ரூ.6.5 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு ரபீக் முகமதுவிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணத்தைத் திரும்ப தராமல் ஏமாற்றினார். இதுகுறித்து புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் பொன்னநகரைச் சேர்ந்த ரபீக் முகமது மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

