Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சாதி கலவரத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்சி, செப்.30: லால்குடி வட்டம் முதுவத்தூர் கிராமத்தில் சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரத பார்க்கவகுல சங்க நிறுவனர் ரவி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதுவத்தூர் கிராமத்தில் கடந்த செப்.16ம் தேதி போலீசார் அனுமதியுடன் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது. அதே ஊரில் மற்றொரு தரப்பினர் அனுமதியின்றி சிலை வைத்து வழிபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டதில் 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.