திருச்சி, ஜூன் 29: உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நேற்று நடந்தது. திருச்சி மாவட்ட கிராம புறங்களில் ஆயிரத்து 314 மையங்களிலும், மாநக பகுதிகளில் 242 மையங்களிலும், நகராட்சி பகுதிகளில் 46 மையங்களிலும் என மொத்தம் ஆயிரத்து 602 மையங்களில், 6 ஆயிரத்து 600 பணியாளர்களின் துணையுடன் நடத்தப்பட்டது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 518 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த மூன்று நாட்களில் களப்பாணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
