Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவெறும்பூர் அருகே இரும்புகள் திருடிய 2 பேர் கைது

திருவெறும்பூர், செப்.28: திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சிப்காட் தொழில்பேட்டையில் இயங்கி வரும் தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் கிரேன் ஓட்டுநர் ஜோஸ்வா அல்ட்ரின் மற்றும் தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனர் புலிகேசி ஆகிய இருவரும் கம்பெனியிலிருந்து இரும்பு வேஸ்ட் பாகங்கள் சுமார் 100 கிலோ திருடி விற்பனை செய்வதற்காக ஜோஸ்வா ஆல்டிரினுக்கு சொந்தமான மொபட்டில் கொண்டு சென்றனர். அப்போது, அவர்களது நிறுவனத்தின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து துவாக்குடி போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் எஸ்ஐ நாகராஜ் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 100 கிலோ இரும்புகளையும், டூவீலரையும் கைப்பற்றி, 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.