மணப்பாறை, செப்.28: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு தீயணைப்புத்துறையினரால் பிடிபட்டது. மணப்பாறை அடுத்த கரிக்கான்குளம் தெரு மயில் ஆர்ச் அருகே குடியிருந்து வருபவர் தனலெட்சுமி. நேற்று இரவு அவரது வீட்டின் முகப்பில் தவளை ஒன்றை விழுங்குவதற்காக வந்த சுமார் 5 நீள நல்ல பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. அதனையடுத்து தனலெட்சுமி அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத்துறையினர் துறை கருவிகள் மூலம் பாம்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர் பாம்பு வனத்துறையினர் மூலம் அருகிலுள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.
+
Advertisement
