Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பெண்ணை தாக்கியவர் கைது

திருச்சி, ஜூலை 27: பெண்ணை தாக்கிய உறவினரை போலீசார் கைது கைது செய்தனர். திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் 37 வயது மதிக்கத்தக்க பெண். இவர் கணவரை பிரிந்து தனது 2 மகள்களுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இவரது உறவினர் மகன் அடிக்கடி வந்து பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் ஜூலை 19ம் தேதி அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அவரை திட்டி கையால் தாக்கினார். இதுகுறித்து புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிந்து சுப்புரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (32) என்பரை கைது செய்தனர். பின்னர் கோர்ட் ஜாமீனில் விடுவித்தனர்.