திருச்சி, செப்.26: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் செப்.24ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே லாட்டரி விற்ற சங்கிலியாண்டபுரம் பாத்திமா தெருவைச் சேர்ந்த செல்வம் (73) முதியவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி மற்றும் ரூ.100 பணத்தை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement

