திருவெறும்பூர், செப்.26: திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் நடந்த கிராம சபா கூட்டத்தில் நகர்நல சங்க நிர்வாகிக்கு தவெக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் கடந்த சுதந்திர தினத்தன்று கிராம சபா கூட்டம் நடந்தபோது அலுவலர், பொதுமக்கள் வரவில்லை எனக் கூறி கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்று கிராம சபா கூட்டம் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவிதா மற்றும் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்களே குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால், வீட்டுமனை பட்டா, 100 நாள் வேலை உள்ளிட்ட பிரச்னைகளை பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு நவல்பட்டு விஜி பொறுமையாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளக்கத்துடன் பாதிலளித்து வந்தார்.


