Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆழ்குழாய் கிணறு பாசன வசதி இல்லாதவர்கள் மாற்றுப்பயிர் சாகுபடி செய்யலாம்

திருச்சி, செப்.26: திருச்சி டெல்டா பாசன விவசாயிகள் நடப்பாண்டு சம்பா சாகுபடியை தவிர்த்து, மாற்றுப்பயிர் சாகுபடியை மேற்கொள்வது நல்லது என திருச்சி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் தெரிவித்தார். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். இதில் முதன்மை பிரச்சினையாக, வறட்சி மற்றும் மேட்டூர் அணையில் இருந்து தாமதமாக பாசனநீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் என்ன பயிர் சாகுபடி செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டம் என்பது டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பாசன பகுதிகள் கொண்ட மாவட்டமாகும். நடப்பாண்டு காவிரியில் போதிய நீர் வரவில்லை. மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரிடுவதா அல்லது மாற்று பயிர் செய்வதா என்பதை அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும். அதே போன்று டெல்டா அல்லாத பகுதிகளில் என்ன மாதிரி மாற்றுப்பயிர்கள் செய்வது’ எனத்தெரிவிக்க கேட்டுக்கொண்டனர்.