Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருவெறும்பூரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 5 மணி நேரம் சர்வர் கோளாறு

திருவெறும்பூர், ஜூன் 26: திருவெறும்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் 5 மணி நேரமாக வேலை செய்யாததால் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். திருவெறும்பூர் அருகே உள்ள விண்நகரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் ஏராளமானவர்கள் தங்களது சொத்துக்களை விற்பது, வாங்குவது சம்மந்தமாக வருகை தருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சார் பதிவு அலுவலகத்தில் சர்வர் காலை முதல் 5 மணி நேரமாக வேலை செய்யவில்லை.

இதனால் பத்திரம் பதிவு செய்ய வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். மறுநாள் பத்திர பதிவு செய்யலாம் என்றால், மறுநாளும் விடுமுறை நாளாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பல புலம்பி சென்றனர். இதுபோல் கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி பத்திரப்பதிவு அலுவலகம் சர்வர் வேலை செய்யாமல் உள்ளது வாடிக்கையாக உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.