Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழ வியாபாரியிடம் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

திருச்சி, மே. 26: பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மகாலட்சுமி நகர் தனரத்தினா தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி (35). இவர் வேனில் சென்று பழ வியாபாரம் செய்து வருகிறார். மே 24ம் தேதி எஸ்.ஐ.டி. அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ரவுடி இருளாண்டி(40) மற்றும் அரியமங்கலம் மலையப்ப நகரைச் சேர்ந்த குஜிலி ரெங்கநாதன்(37) ஆகிய 2 பேரும் செல்வமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து இருளாண்டி, ரங்கநாதன் ஆகியோரை கைது செய்தனர்.