துவரங்குறிச்சி, செப்.24: துவரங்குறிச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வடகம்பட்டி பகுதியில் அதிகளவில் குட்கா விற்பனை நடைபெறுவதாக துவரங்குறிச்சி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வடகம்பட்டி பெட்டிக் கடையில் மாரியப்பன் (52) மற்றும் அவரது உறவினர் அஜித்குமார் (27) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 5 மூட்டைகளையும் துவரங்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
+
Advertisement


