துறையூர், செப்.24: உப்பிலியபுரம் அருகே அரசு தடை செய்துள்ள லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். முசிறி வட்டம், தா.பேட்டை சேர்ந்தவர் மருதை மகன் திருப்பதி(45). இவர் உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட விசுவாம்பாள் சமுத்திரம் (வடக்கு) பகுதியயில் டிவிஎஸ் எக்ஸ் எல் வாகனத்தில் வைத்து லாட்டரி சீட்டு விற்றபோது அந்த வழியாக ரோந்து சென்ற முசிறி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திருப்பதியை பிடித்து உப்பிலியபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து திருப்பதியைக் கைது செய்தனர். மேலும் அவர் வசமிருந்த டூவீலர், செல்போன், ரூ.2260 ரொக்கப்பணம், 56 லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


