துவரங்குறிச்சி, செப்.23: மணப்பாறை அருகே மான் தோல் மற்றும் சந்தன கட்டைகள் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள தூண்டி கருப்பண்ணசாமி கோயில் அருகே மான்தோல் விற்பதாக மத்திய வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவு குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அங்கு சென்ற தமிழ்நாடு வனவிலங்கு மற்றும் வனப்பகுதி குற்றத் தடுப்பு பிரிவு குழுவினர் மற்றும் மணப்பாறை வனச்சரக அலுவலர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில் மத்திய வன விலங்கு குற்ற தடுப்பு பிரிவு குழுவினர் மான்தோல் வாங்குவதை போல் பேரம் பேசி ஒரு தோல் ஒரு லட்ச ரூபாய் என்று கூறியதன் பேரில் இரண்டு தோள்களை வைத்திருந்த கேரளாவை சேர்ந்த ரமேஷ் (60) மற்றும் கலிங்கப்பட்டியைச் சேர்ந்த அழகர்(43) ஆகிய இருவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.


