Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்டா மாவட்டத்தில் 4 மாதத்தில் 477 வழக்குகளுக்கு சிறை தண்டனை

திருச்சி,ஜூன் 23: திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தின் மூலம் தண்டனைகள் பெற நடவடிக்கை எடுக்க மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 01.01.26 முதல் 18.05.26 வரை குற்ற வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு கோர்ட் விசாரணையின் மூலம் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொலை குற்ற வழக்குகள் தொடர்பாக திருச்சி 7, புதுக்கோட்டை 4, கரூர் 10, தஞ்சாவூர் 6 மற்றும் மயிலாடுதுறை 2 மொத்தம் 29 வழக்குகளில் கோர்ட் மூலமாக சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆதாயக்கொலை வழக்குகள் தொடர்பாக: திருச்சி 1, புதுக்கோட்டை 1, கரூர் 1 என மொத்தம் 3 வழக்குகளில் ஆயுள் சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.கூட்டுக்கொள்ளை வழக்குகள் தொடர்பாக: திருச்சி 1, தஞ்சாவூர் 1 என மொத்தம் 2 வழக்குகளில் நீதிமன்றங்கள் மூலமாக சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. கொள்ளை வழக்குகள் தொடர்பாக: திருச்சி 7, கரூர் 1, பெரம்பலூர் 1, தஞ்சாவூர் 4, திருவாரூர் 4 மற்றும் நாகப்பட்டிணம் 2 வழக்குகளில் நீதிமன்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. மூலமாக மொத்தம் 19 சிறைத் தண்டனைகள். வீடு புகுந்து திருடுதல்: திருச்சி 15, புதுக்கோட்டை 1. அரியலூர் 1. தஞ்சாவூர் 7, திருவாரூர் 4, நாகப்பட்டிணம் என மொத்தம் 30 வழக்குகளில் நீதிமன்றங்கள் மூலமாக சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.

வழிப்பறி வழக்குகள்: திருச்சி மாவட்டத்தில் 6 வழக்குகளில் நீதிமன்றங்கள் மூலமாக சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகள்: திருச்சி 23, புதுக்கோட்டை 16, தஞ்சாவூர் 17 மற்றும் திருவாரூர் 1 என மொத்தம் 57 வழக்குகளில் நீதிமன்றகள் மூலமாக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. விபத்து வழக்குகள்: திருச்சி 7. கரூர் 3 மற்றும் பெரம்பலூர் மொந்தம் 11 வழக்குகளில் நீதிமன்றங்கள் மூலமாக சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகள்: திருச்சி 1 மற்றும் திருவாரூர் 1 என மொத்தம் 2 வழக்குகளில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள்: திருச்சி 21. புதுக்கோட்டை 7, கரூர் 4, பெரம்பலூர் 1, அரியலூர் 2, தஞ்சாவூர் 8 மற்றும் திருவாரூர் 2 என மொத்தம் 45 வழக்குகளிலும், வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்குகளில் திருச்சி 5, புதுக்கோட்டை 2, தஞ்சாவூர் 2, திருவாரூர் 3 மற்றும் நாகப்பட்டிணம் 1 மொத்தம் 13 வழக்குகளில் நீதிமன்றங்கள் மூலமாக சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண மற்றும் கொடுங்காயம் ஏற்படுத்துதல் வழக்குகள் தொடர்பாக திருச்சி 12, புதுக்கோட்டை 6, கரூர் 1, அரியலுர் 1, தஞ்சாவூர் 7, திருவாரூர் 3 மற்றும் மயிலாடுதுறை மொத்தம் 31 வழக்குகளில் நீதிமன்றங்கள் மூலமாக சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதர குற்ற வழக்குகள் தொடர்பாக திருச்சி 206, புதுக்கோட்டை 5, கரூர் 1, அரியலூர் 4, தஞ்சாவூர் 9. திருவாரூர் 3 மற்றும் மயிலாடுதுறை 1 என மொத்தம் 229 வழக்குகளில் நீதிமன்றங்கள் மூலமாக சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக டெல்டா மாவட்டத்தில் 477 வழக்குகளுக்கு நீதிமன்றங்கள் மூலமாக சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் குற்ற வழக்குகளை கண்டுபிடித்து, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற விரைவாக நடவடிக்கை எடுக்க மத்திய மண்டலத்தில் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.