Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது

திருச்சி, மே 23: திருச்சி கருமண்டபம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்கலீல்(43). இவர் கண்டோன்மென்ட் விஓசி சாலையில் மே.21ம் தேதி டிபன் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது கருமண்டபம் பகுதியை சேர்ந்த ரவுடி கங்காதரன்(23) அங்கு வந்து மது அருந்தவதற்கு, அப்துல்கலீலிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.400 கேட்டார். அவர் பணம் தர மறுத்து போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்குபதிந்து ரவுடி கங்காதரனை கைது செய்தனர்.