Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தண்டவாளத்தில் தலைவைத்து இளம்பெண் தற்கொலை

லால்குடி, ஜூன் 22: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை பாலாஜி நகர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாள பகுதியில் தலை துண்டான நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து கிடந்த 28 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண். ஊதா கலரில் சுடிதார் அணிந்திருந்தார். அவர் நேற்று 21ம் தேதி காலை மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.