Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுபோதையில் தகராறு: 4 பேர் கைது

திருச்சி, மே 22: திருச்சியில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே. நகர் தென்றல் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன்(26). இவர் மே 19ம்தேதி இரவு கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியில் உள்ள மதுபான கடையில் மது வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பலுக்கும், இவருக்குமிடையே மது வாங்குவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கலைச்செல்வனை தாக்கினர். இதுகுறித்து புகாாின் பேரில் கே.கே நகர் போலீசார் வழக்குபதிந்து கே.சாத்தனூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து(37), மற்றும் ராதாகிருஷ்ணன் (22), நாகமங்கலத்தை சேர்ந்த மோகன்ராஜ் (26), புதுக்கோட்டையை சேர்ந்த கிஷோர்(22) ஆகிய 4 பேரை கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுவித்தனர். மேலும் கே.சாத்தனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(35) என்பவர் மீது வழக்குபதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.