Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விஏஓ பணி வழங்க வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஆக.21:கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் சார்பில், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் சந்தியா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் எனப்படும் அடிப்படை ஊதியமாகிய ரூ.15,700 வழங்க வேண்டும்.

1.4.2003க்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க தனி அரசாணை வெளியிட்டது போன்று 1.4.2003க்கு பின்னர் பணி நியனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு CPS/TAPS திட்டத்தில் ஓய்வூதியம் கிடைக்க அரசாணை வெளியிட வேண்டும். கடந்த காலங்களில் வழங்கியது போன்று கருணை அடிப்படையில் விஏஓ பணி வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் 2,299 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

கிராம உதவியாளர்கள் என உள்ள பெயரை துணை கிராம நிர்வாக அலுவலர் என பெயர் மாற்றம் செய்து காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, மாவட்ட தலைவர் நடராஜ் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் மதியழகன், இணை செயலாளர் ஸ்டீபன்ராஜ், பிரவீன், ரமா நந்தினி, யோகலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.