Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மண்ணச்சநல்லூரில் 30 பவுன் திருட்டு வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

சமயபுரம், ஆக.20: மண்ணச்சநல்லூரில் நடந்த 30 பவுன் திருட்டி வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அழகு நகர் பகுதியை சேர்ந்தவர் சம்மனசு மேரி (63). இவரது வீட்டில் கடந்த ஜூன் 22ம் தேதி வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைத்து கடந்த ஜூன் 25ம்தேதி அன்று சினிமா பாணியில் கொள்ளையர்கள் முளியன் குமார் மற்றும் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த முளியன் குமார் மனைவியான மண்ணச்சநல்லூர் அருகே உள்ள துடையூர் வடக்கு தெருவை சேர்ந்த மேகலா(35) என்பவரை நேற்று மண்ணச்சநல்லூர் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரிடம் மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.