Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துவரங்குறிச்சி அருகே பஞ்சரான பஸ் மீது லாரி பயங்கர மோதல்

துவரங்குறிச்சி, மே 20: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளுடன் நேற்று அதிகாலை புறப்பட்டது. பேருந்தை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம்(35) ஓட்டினார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேத்துப்பட்டி என்ற இடம் அருகே காலை 4 மணிக்கு வந்தபோது, பேருந்தின் முன்பக்க டயர் பஞ்சரானது. இதையடுத்து டிரைவர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு டயரை மாற்றி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து சென்னைக்கு பார்சல் ஏற்றி வந்த லாரி பேருந்து பின்னால் மோதியது. இதில் லாரியின் முன்பக்கம், ேபருந்தின் பின்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவர் ராஜ்குமார்(25) லாரியின் இடிபாட்டுக்குள் சிக்கி தவித்தார்.