Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார் மோதி விவசாயி பலி

துவரங்குறிச்சி, மே 20: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வேலக்குறிச்சியை சேர்ந்தவர் சக்திவேல்(30). விவசாயி. இவர் நேற்று இரவு சிவகங்கை மாவட்டம் கரியாம்பட்டியில் இருந்து அவரது மனைவி செல்வி மற்றும் 6 மாத கைக்குழந்தை இருவரையும் அழைத்து கொண்டு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் வந்தார்.

பெரம்பலூரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற கார் எதிர்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வரும் வழியிலேயே சக்திவேல் இறந்தார். செல்வி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துவரங்குறிச்சி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.