திருச்சி, ஆக.19: திருச்சி பீமநகர் யானை கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஹிர் அகமது (61). ஆக.17ம் தேதி இவரது வீட்டின் ஏ.சி. காப்பர் வயரை வாலிபர் ஒருவர் திருட முயன்றார். அப்போது அருகிலுள்ளவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குபதிந்து பாலக்கரை கூனி பஜார் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவீந்திரன் (19) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து காப்பர் வயரை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement



