Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கல்லக்குடியில் நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

லால்குடி, ஜூன் 19: லால்குடி அருகே கல்லக்குடியில் நின்றிருந்த லாரியின் பின்னால் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், வாரணாசி கிராமத்தில் வசித்து வரும் குமார் மகன் மணிகண்டன் (32). இவருக்கு அன்புமீனா என்ற மனைவி (32 )உள்ளார். அன்பு மீனா வாரணாசி கிராமத்தில் ஊராட்சி அலுவலகத்தில் கணினி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மணிகண்டன் சொந்தமாக கிரேன் வாகனம் வைத்து அரியலூர், கரூர், கருங்காலியில் உள்ள சிமெண்ட் ஆலை பகுதியில் கிரேனை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கரூர் பகுதியில் வேலையை முடித்து விட்டு நேற்றுமுன்தினம் தனது பைக்கில் திருச்சி-சிதம்பரம் சாலையில் திருச்சியிலிருந்து அரியலூர் நோக்கி வந்தார். அப்போது கல்லக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல்கர் லாரியில் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதியதில் மணிகண்டன் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.