Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆவாரம்பட்டியில் 100 நாள் வேலை கேட்டு பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை

மணப்பாறை, ஜூன், 19: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவாரம்படிட்யில் முறையாக 100 நாள் வேலையை அளிக்க வலியுறுத்தி பஞ்சாயத்து அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் மலையடிப்பட்டி ஊராட்சி ஆவாரம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊராக வேலை உறுதி திட்டத்தில் பணியாளர்களுக்கு முறையாக வேலை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆத்திரமடைந்த அப்பகுதி பணியாளர்கள் நேற்று ஆவாரம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.