Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கார் மீது வேன் மோதல் 9 பேர் உயிர்தப்பினர்

திருச்சி மே 19: திருச்சியில் கார் மீது வேன் மோதிய விபத்தில் 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மதுரையில் இருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு கார் சென்று கொண்டிருந்தது. பஞ்சப்பூர் அருகே நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால், டிரைவர் சட்டென பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த கார் முன்னாள் சென்ற கார் மீது மோதியது. அதனை தொடர்ந்து பின்னால் மதுரை அழகர் கோயிலுக்கு சென்றுவிட்டு தஞ்சாவூர் நோக்கி சென்ற வேன் கார் மீது மோதியது. இதில் வேனில் வந்த டிரைவர் பாரதிதாசன் உட்பட 9 பேர் சிறிது காயத்துடன் உயிர் தப்பினர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.