திருச்சி, ஆக.18: திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு கட்டமைப்புகள் பொருத்துதல் மற்றும் வெல்டிங் பணிகள் நடைபெற உள்ளன. இதனையொட்டி இன்று (18.08.2026) அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக திருச்சி மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
அடைக்கப்படும் வழிகள்:
மாநகரிலிருந்து பழைய மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல இயலாது. ரயில்வே ஜங்ஷனிலிருந்து வரும் வாகனங்களும் அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் வழியாக செல்ல இயலாது.
மாற்று வழித்தடங்கள்:
மாநகருக்குள் செல்லும் வாகனங்கள்: தலைமை தபால் நிலையம் வழியாகச் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள்: தலைமை தபால் நிலையம் டிவிஎஸ் டோல்கேட் வழியாகச் செல்லலாம்.




